Wednesday, July 17, 2013



அன்று பூத்திருந்த
காளான் அணிவகுப்பில்
குருவிச்சனங்கள்
கலந்து கொள்ளவில்லை.
சிறகுகள் தின்னும்
வெறியுடன் புடைத்த காளான்
மணித்தலை வெடித்துச் சிதறியதும்
எறும்புகள் கடத்தின.
பாழ்வெளியினில் தளிராய் முளைத்தது
ஒர் இளஞ் செடி....
பறவை எச்சம்.

Tuesday, July 16, 2013



வயப்படுதல் என்பதொரு சஞ்சாரத்தினில்
உன்னிடம் இருந்தேன்.
நம்மிடையே கரைந்து உலர்ந்து போன
மணிக்கணக்கான  நேரங்கள்    
பருக்கைகளாய் சிதறும்.
பிரியும் போது
இரு கை நிறைய
அள்ளிப் போகிறேன்.
அர்த்தங்கள் தேடவேண்டி அப்பார்வைகளை.