அன்று பூத்திருந்த
காளான் அணிவகுப்பில்
குருவிச்சனங்கள்
கலந்து கொள்ளவில்லை.
சிறகுகள் தின்னும்
வெறியுடன் புடைத்த காளான்
மணித்தலை வெடித்துச் சிதறியதும்
எறும்புகள் கடத்தின.
பாழ்வெளியினில் தளிராய் முளைத்தது
ஒர் இளஞ் செடி....
பறவை எச்சம்.
No comments:
Post a Comment