Monday, April 30, 2018

பாப்கார்ன் ஏன் இப்படி செய்கிறது

பாப்கார்ன்...
உணவல்ல
சிற்றுண்டி கூட அல்ல.
விரும்பி உண்பேன்
ருசிக்கு பசித்தால்...
வடிவமற்று அழகற்று
தகர்ந்த பஞ்சுபாறைகள்.
அவசரமாய் தின்றால்
கை நழுவி விழும்
ஒன்றிரண்டு உறுதியாக
ஒவ்வொரு முறையும்...
பற்களை விடவும்
நாக்கால் உண்ணும்
தந்திரம் வேண்டும்.
மாயங்கள் செய்யும்
மஞ்சளின் காரமும்
சோளத்தின் இலகுவும்
பம்மிக்கரையும்
சுவைகளினூடே
நீங்கள் மழையை
பார்த்துவிட்டால்
யோகக்காரர்தான்.
எங்கும் உண்ணலாம்.
தியேட்டர், டிவி முன்பு
நண்பருடன்,திண்ணையில்...
சோளங்கள் அலாதியானது.
உண்டு தீர்ந்தாலும்
நாக்கு கேட்கும்
இன்னும் இருக்கிறதா?
முணுமுணுத்த மனம்
தவறி விழுந்த
ஒன்றிரண்டையும் தேடும்...
ஒவ்வொரு முறையும்
இதேபோல் தவறிப்போன
அவளை நினைத்தபடி...

No comments:

Post a Comment